வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.70 லட்சம் பறிமுதல்
வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொட்டை பாக்கு வியாபாரி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.70 லட்சம் பறிமுதல்.;
வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொட்டை பாக்கு வியாபாரி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என கண்காணிக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து கண்காணித்து வருகிறது. வாணியம்பாடியில் சுழற்சி முறையில் 3 குழுக்கள் வாணியம்பாடி நகர்புற பகுதிகளில் பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜின்னாசாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக காரில் வந்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த கொட்டை பாக்கு வியாபாரி அப்துல் ரஹீம் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.70 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்டான்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்.