வாணியம்பாடியில் காவலர் மற்றும் பள்ளி மாணவி உட்பட 11 பேருக்கு கொரோனா
வாணியம்பாடி கொரோனா தொற்றின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.;
வாணியம்பாடியில் காவலர் மற்றும் தனியார் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.வாணியம்பாடியில் தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்வு.
திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல்நிலை காவலர் ஒருவர் மற்றும் , தனியார் பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவி, அம்பூர்பெட்டை, நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் நிலையம், காவலர் குடியிருந்த காவலர் குடியிருப்பு, பள்ளி மாணவியின் வீடு அமைந்துள்ள அம்பூர்பேட்டை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவலர் உடன் தொடர்பில் இருந்த மற்றும் பள்ளி மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வாணியம்பாடி கொரோனா தொற்றின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.