வாணியம்பாடியில் நாய் கடித்து 6 பேர் காயம்
வாணியம்பாடியில் நாய் கடித்து 6 பேர் காயம். மருத்துவமனையில் சிகிச்சை;
வாணியம்பாடியில் நாய் கடித்து 6 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ளே வியாபாரிகள் மற்றும் சாலையோர கடைக்காரர்கள் என 6 பேரை திடீரென நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்துள்ளது. மேலும் இதே போல் ஆசிரியர் நகர் பகுதியில் நாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற முதியவர்கள் மற்றும் சிறுவர்களை கடித்துள்ளது.
இதுகுறித்து பலமுறை வாணியம்பாடி நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதுவரை நகராட்சி நிர்வாகம் நாயை பிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தற்போது பேருந்து நிலையம் சி.எல்.சாலையில் அந்த நாய் சுற்றி வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்