வாணியம்பாடி அருகே செயின் பறித்த வழக்கில் 2 பேர் கைது
வாணியம்பாடி அருகே செயின் பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு 2 சவரன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு என்ற இடத்தில் நேற்று முன்தினம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நடந்து சென்ற மணிகண்டன் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக மணிகண்டன் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி நியூட்டன் அருகில் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பிடித்து பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு முரணாக பதில் அளித்துள்ளார். விசாரணையில் அவர் கோணாமேடு வி எஸ் கே நகர் பகுதியை சேர்ந்த ராகுல் என தெரிய வந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் வலையாம்பட்டு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செயின் பறித்தது காக்கா என்கின்ற பூபாலன் தான் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ராகுலை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
மேற்கொண்டு நடத்திய விசாரணை அடிப்படையில், ராகுல் மற்றும் மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த காகா என்கின்ற பூபாலன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 சவரன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காளிமுத்து வேல் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..