ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
வருவாய்த் துறையினர் நடவடிக்கை;
வாணியம்பாடி அருகே ஆந்திரா மாநிலத்திற்கு கடத்த சாலையோரம் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி ஊராட்சி செங்கத்து வட்டம் பகுதியில் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்த சாலையோரம் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் வருவாய் துறையினருக்கு கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று பார்த்த போது அங்கே 18 மூட்டைகளில் சுமார் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்ததை பார்த்து அதனை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பின்னர் நேதாஜி நகரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.