ஆலங்காயம் பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார்;
ஆலங்காயம் பகுதியில் மாவட்ட கலெக்டர் குஷ்வாஹா ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து நடக்கக்கூடிய வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரியிடம் கேட்டறிந்தார். மேலும் கொரோனா காலகட்டத்தில் புகார் பெட்டி உள்ள மனுக்களை விசாரித்தார் அதனைத் தொடர்ந்து 102 ரெட்டியூர் பகுதிக்குச் சென்ற கலெக்டர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்யக்கூடிய நபர்கள் வருகைப் பதிவேட்டில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா மேலும் அவர்களுக்கு முதலுதவி செய்வதற்கான உபகரணங்கள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார். அதனை முறைப்படி செய்யாத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பிரதமர் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை குறித்து ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் முறைப்படி பயனாளிகளிடம் பெறப்பட்ட வீடு கட்டப் படுட்டு வருகின்றனவா என்பதை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து மேட்டூர் பகுதிக்குச் சென்ற ஆட்சியர் அப்பகுதியில் உள்ள கடைகளில் கொரோனா காலகட்டத்திற்கு தனிமனித இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணிந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனரா என்பதை ஆய்வு செய்தார். அப்பொழுது முகக் கவசங்கள் அணியாமலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார் இந்த ஆய்வில் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், மணவாளன் ஒன்றிய பொறியாளர் செல்வி, ஒன்றிய மேற்பார்வையாளர் சதீஷ், அழகரசு உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.