வாணியம்பாடியில் பால் கடைகள் திறக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

Update: 2021-05-25 16:15 GMT

மாதிரி படம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் வாணியம்பாடி பகுதிகளில் வீடு தேடி பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் ஆகியவற்றை  வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை வாணியம்பாடி தாலுக்கா அலுவலகத்தில் மட்டும் 120 வாகன அனுமதி பாஸ்  வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும்  மக்கள் அதிக அளவில் கொரோனா நோயை பொருட்படுத்தாமல் சுற்றித் திரிவதால், பால் கடைகள் திறக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Similar News