திருப்பத்தூரில் பெய்த கனமழையால் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீர்

மின்மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணியில் நகராட்சி துறையில் ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2021-04-15 12:24 GMT

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. திருப்பத்தூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக இந்த ரயில்வே மேம்பாலம் உள்ளது. கிராமங்களில் இருந்து  காய்கறிகள், தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க விற்க  வேண்டும் என்றாலும்  திருப்பத்தூர் நகர் பகுதியில் நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது

இந்த மேம்பாலம் மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி, மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அப்போது நகராட்சி நிர்வாகம் மின்மோட்டார் மூலம் தேங்கியுள்ள மழைநீரை  வெளியேற்றுகின்றனர்

அரசுக்கு சொந்தமான நீர்நிலை, ஆற்று ஓடைகள் ஒரு சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததினால் ஏரிக்கு செல்லவேண்டிய மழைநீர், செல்ல வழியின்றி தாழ்வாக உள்ள ரயில்வே  மேம்பாலத்தின் அடியில் ஏரி போல் தேங்கி இருக்கிறது. மழை பெய்யும் பொழுதெல்லாம் தேங்கி நிற்கும் மழைநீரை நகராட்சி நிர்வாகம் மின்மோட்டார் மூலம் வெளியேற்றுவது வாடிக்கையாக உள்ளது. 

மாவட்ட நிர்வாகம் உடனடியாக மழைநீர் செல்லும் கால்வாய் அமைத்து ஏரிக்கு கொண்டு சென்றால் மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும் என  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது. மேலும் பாலத்தின் வழியாகத்தான் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு பகுதி செல்லவேண்டும் என்பதினால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!

Tags:    

Similar News