சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு

Update: 2021-12-07 11:15 GMT

சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம்  இருனாப்பட்டு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தை  சேர்ந்த பாப்பாத்தி (வயது 75) உடல் நலக்குறைவால் காலமானார்  இந்நிலையில் இவரை அடக்கம் செய்வதற்கு சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை என கூறி பாதையை சீரமைத்து தராத அரசு அதிகாரிகளை கண்டித்து திருப்பத்தூர் ஆலங்காயம் செல்லும் சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏற்கனவே சாலையை சீரமைத்து தர கோரி பலமுறை அதிகாரியிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தற்பொழுது அருகில் இருக்கக்கூடிய ஏரி நிரம்பி அதனுடைய உபரி நீரானது சுடுகாட்டிற்கு செல்லும் பாதையிலேயே செல்வதால் தண்ணீரில் இடுப்பு அளவில்  சென்று சுடுகாட்டிற்கு அடக்கம் செய்யும் நிலை உருவாகியுள்ளதாக கூறினர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரிசிலாப்பட்டு போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு பின்னர் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்..

இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags:    

Similar News