வாணியம்பாடி சார்பதிவாளர்(பொறுப்பு) உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம்

போலி பத்திரப்பதிவு புகாரில் வாணியம்பாடி சார்பதிவாளர் (பொறுப்பு) உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

Update: 2021-10-28 13:30 GMT

 தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வாணியம்பாடி சார்பதிவாளர் (பொறுப்பு) உமாபதி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கேத்தாண்டப்பட்டி அடுத்த சஞ்சீவனூர் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் 3 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கர் நிலம் போலி பத்திரம் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

இது தொடர்பாக மணி சார்பதிவாளர் மற்றும் போலி பத்திரம் தயார் செய்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், போலி பத்திரம் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்டதை நிலத்தை திரும்ப பெற்று தரக்கோரி நகர காவல் நிலையத்தில் கடந்த 23ம் தேதி புகார் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே வாணியம்பாடி நியூடவுன் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த இறந்த பேபி அம்மாள் பெயரில் இருந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்த நபர்களுக்கு உடந்தையாக இருந்து பத்திரப்பதிவு செய்ததாக பாதிக்கப்பட்டவர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

புகார்களின் அடிப்படையில் தொடரும் போலி பத்திர பதிவுகளால் வாணியம்பாடி சார்பதிவாளர் (பொறுப்பு) உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவு துறை ஐ. ஜி சிவன் அருள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News