திருப்பத்தூர் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பத்தூரில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

Update: 2022-03-23 12:24 GMT

திருப்பத்தூர் கோட்டை தெருவில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

திருப்பத்தூர் கோட்டை தெருவில் உள்ள அரசு ஆண்கள் தொடக்கப்பள்ளி மற்றும் பெண்கள் பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதில் நகர்புற மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, பள்ளி தலைமையாசிரியர்கள் நியாஸ்அஹமத், நபில்அஹமத், 9-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் சையத் அபுபக்கர், 10-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் முஜிபூர் ரெஹமான், ரபீக் அஹமத்  உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News