திருப்பத்தூர் அளிஞ்சிகுளம் ஊராட்சி தீண்டாமை கடைபிடிக்காத கிராமமாக தேர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத கிராமமாக அளிஞ்சிகுளம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு;
ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு அரசின் மூலம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாணியம்பாடி அடுத்த அளிஞ்சிகுளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் காண காசோலையை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பூங்கொடி இடம் வழங்கினார்.
அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் மகேஷ் பாபு, நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.