திருப்பத்தூர் அருகே கருவில் இருப்பதை கண்டறிந்து பணம் பறித்த இருவர் கைது
திருப்பத்தூர் அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என சட்டவிரோதமாக கண்டறிந்து பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டு. ஸ்கேன் மிஷின் பறிமுதல்;
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கதிரம்பட்டி அருகே சட்டவிரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து வருவதாக புகார் வந்தது.
அதனடிப்படையில் சென்னை சுகாதாரத் துறை கண்காணிப்பு குழுவினர் சரவணன், கமலக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் மகிமை கனரன் தோட்டம், என்கிற காட்டுப் பகுதியில் ஒரு குடிசை கூடாரத்தில் சுமார் 10 பெண்களை அமரவைத்து அவர்களுடைய கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பது ஸ்கேன் மூலமாக கண்டறியப்பட்டு வருவதை கண்காணித்தனர்.
அப்பொழுது சுகுமார் மற்றும் வேடியப்பன் ஆகிய 2 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கருவில் இருப்பது ஆணா பெண்ணா எனக் கண்டறிய ஒருவரிடம் 8000 ரூபாய் என பணத்தை பெற்றுள்ளனர் அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே 4 முறை கைது செய்து சிறை சென்றவர் எனவும் தெரியவந்தது.
மேலும் அவரிடமிருந்து ஸ்கேன் செய்யும் கருவி மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்