திருப்பத்தூருக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் - திமுக வேட்பாளர்

திருப்பத்தூரில் அனைத்து கிராம பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவருவேன் என திமுக வேட்பாளர் நல்லதம்பி தெரிவித்தார்.;

Update: 2021-03-31 04:11 GMT

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினரும்மான நல்லதம்பி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுனிச்சி, நாயுடு வட்டம், செட்டியார் வட்டம் உட்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..

அப்போது பொது மக்களிடையே பேசுகையில் நான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் கந்திலி ஒன்றியத்தில் புதியதாக 1500 மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கி அதன் மூலமாக அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவேன்

அனைத்து கிராம பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவருவேன் படித்த ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர பாடுபடுவேன் தருவேன் என வாக்குறுதி அளித்தார் இதில் கூட்டணி கட்சியினர் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்...

Tags:    

Similar News