கர்நாடகாவிலிருந்து காரில் மது கடத்திய 3 பேர் கைது.
கர்நாடகாவிலிருந்து மது பாக்கெட்டுகளை காரில் கடத்திய 3 பேர் கைது! 3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்.;
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த எட்டிகுட்டை பகுதியில் நேற்று இரவு திருப்பத்தூர் மது அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அதிவேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2016 மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை செய்ததில் அவற்றை கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், ரவி, முத்துராஜ் ஆகியோரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த திருப்பத்தூர் அமலாக்க போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.