திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 11 பேர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று காரணமாக அடுத்தடுத்து 11 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அடுத்தடுத்து 11 பேர் உயிரிழப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றானது அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 10 பேருக்கு கூட நோய்த்தொற்று ஏற்படாமல் இருந்த நிலையில் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக தற்போது தினம் தினம் 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு போதிய ஆக்சிஜன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் இரண்டாம் அலை வேகமாக பரவி வரக் கூடிய நிலையில் அதிக அளவில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது அடுத்தடுத்து சிகிச்சைக்கு வருவோர் அதிகரித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அதே போன்று நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 4 பேரும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 7 பேரும் அரை மணி நேரத்திற்கு ஒருவர் என அடுத்தடுத்து 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போதிய வசதிகளை செய்து தரவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய இரண்டு மருத்துவமனையில் அரை மணி நேரத்திற்கு ஒருவர் என அடுத்தடுத்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.