திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பதிவான வாக்குகளை எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்;
வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் அமர் குஷ்வாஹா
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் வடுகமுத்தம்பட்டி குருசிலப்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், தேர்தல் நடந்து அலுவலர் பிரேம்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்..