ஸ்டாலின் ஓர் அரசியல் வியாபாரி: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
நடைப்பெறுகின்ற தேர்தல் விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் நடக்கும் தேர்தல். ஸ்டாலின் ஓர் அரசியல் வியாபாரி என அன்புமணிராமதாஸ் கடும் விமர்சனம் செய்தார்.;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் டி.கே.ராஜாவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், நடைப்பெறுகின்ற தேர்தல் விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் நடக்கும் தேர்தல். ஸ்டாலின் ஓர் அரசியல் வியாபாரி என அன்புமணிராமதாஸ் கடும் விமர்சனம் செய்தார்.
திமுக மீண்டும் தப்பி தவறி ஆட்சிக்கு வந்தால் பெண்கள் வெளியே நடமாட முடியாது எனவும்,ஸ்டாலினிடம் சமூக நீதி என்னவென்று கேட்டால் அது அது கிலோ எவ்வளவு எனக் கேட்பார். அவருக்கு சமூகநீதி என்னவென்று தெரியாது! சமத்துவம் என்றால் தெரியாது! இட ஒதுக்கீடு என்னவென்று தெரியாது! வரலாறு என்னவென்று தெரியாது! அவருக்கு மரியாதை தெரியாது! சமத்துவம் தெரியாது! அவருக்கு கணக்கும் தெரியாது! இதுதான் ஸ்டாலின் என விமர்சித்து பேசினார்.
மேலும் தமிழகத்தில் 70ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி முதல்வராக இருக்கிறார் மீண்டும் எடப்பாடியார் முதல்வராக திருப்பத்தூர் தொகுதியில் டி.கே.ராஜாவிற்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெரும் வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பெற வைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டு கொண்டார். இந்த பிரசாரம் கூட்டத்தில் அதிமுக, பாமக,பாஜக,தமாக என ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.