திருப்பத்தூர் மாவட்டஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக பட்டியல் வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்கள் பட்டியலை திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜ் வெளியிட்டார்

Update: 2021-09-22 10:51 GMT

தேர்தலில் போட்டியிடும் திமுக உறுப்பினர்கள் பட்டியலை  வெளியிட்ட மாவட்டச் செயலாளர் தேவராஜ்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பட்டியலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலையில் வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி வெளியிட்டார்..

இதனை ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.சத்தியமூர்த்தி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கே.சதிஷ்குமார், மாதனூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ப.ச.சுரேஷ்குமார், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.ஞானவேலன், பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம் சார்பில் வி.அசோக் ஆகியோர் பெற்று கொண்டார்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 11 இடங்களிலும், விடுதலை சிறுத்தை 1, இடத்திலும் காங்கிரஸ் 1 இடத்திலும் போட்டியிடுகிறது.

6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் காங்கிரசுக்கு 6 இடங்களும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும் என மீதமுள்ள 115 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.

இந்நிகழ்வில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் உடனிருந்தனர்

Tags:    

Similar News