திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 1 நபர் இன்று உயிரிழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது.
ஒரே நாளில் மாவட்டத்தில் 25 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 1 நபர் மட்டும் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் ஒரு நாள் சிறப்பு சிகிச்சை மையங்களில் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 223 ஆக உள்ளது.