திருப்பத்தூரில் சந்தனக்கூடு திருவிழா
திருப்பத்தூர் முனி குளம் தெருவில் அமைந்துள்ள ஹஸ்ரத் காதிரி ரஹமத்துல்லாவின் 334 ஆம் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.;
திருப்பத்தூர் முனி குளம் தெருவில் அமைந்துள்ள ஹஸ்ரத் காஜாசெய்யத்ஷா மீரான் உசேனி சிஷ்தி காதிரி ரஹமத்துல்லாவின் 334 ஆம் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.
இந்த சந்தனக்கூடு உரூஸ் நிகழ்ச்சி சையத் ஷா மக்தூம் உசேனி தலைமையில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சந்தன குடம் திருப்பத்தூர் ஆலங்காயம் சாலை, ஜின்னா ரோடு, அரீப்நகர், காயிதே மில்லத் நகர் ஆகிய முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று ஃபாத்திஹா மற்றும் அவரது தர்காஹ்வில் சந்தனம் பூசி உலக மக்கள் நன்மைக்கு மற்றும் உக்ரைன் தாக்குதலில் இருந்து இந்திய மக்கள் காப்பாற்ற சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது..