திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
திருப்பத்தூரில் ரோட்டரி சங்கம் மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கம் சார்பாக 18 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன;
திருப்பத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான 16 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. வேலூர் பெண்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்
ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரோட்டரி சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பெண்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்