திருப்பத்தூர் மாவட்டம்-ஸ்ரீ சுப்பிரமணியசாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா
ஆம்பூர் அருகே அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்;
திருப்பத்தூர் மாவட்டம் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா
ஆம்பூர் அருகே நடைபெற்ற அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் மகாதேவமலை மகானந்த சித்தர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் கிராமத்தில் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா திருப்பணிக்குழு தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவிற்காக நேற்று காலை முதலே கோபூஜை ,விக்னேஸ்வரபூஜை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் ,நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி, அங்குரார்ப்பணம், முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்படுதல் உள்ளிட்ட முக்கிய பூஜைகளைத் தொடர்ந்து மூலவர் விமான கும்பாபிஷேகம் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சுவாமி நவகிரக பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் கலச நீர் கொண்டுவரப்பட்டு கோபுர கலசத்திற்கு மகாதேவமலை மகானந்த சித்தர் அவர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோபுர கலசத்தின் மீது கலச நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது இதில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சுற்றுவட்டார பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்