திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு கொரோனா நோய் தொற்று
திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் தொற்று வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல் சோர்வு இருந்தநிலையில் இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனை முடிவில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் தற்போது பூரண பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன