திருப்பத்தூர் சித்த மருத்துவர் விக்ரம்குமாருக்கு சிறந்த சேவைக்கான விருது
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் சித்த மருத்துவர் விக்ரம்குமாருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது..
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகம் தீவிரமடைந்த நேரத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு 950 பேர் நலமுடன் வீடு திரும்பினர்.
இந்நிலையில் சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்துவரும் கொரோனா சித்த மருத்துவ விக்ரம்குமார் அவருக்கு திருப்பத்தூர் தனியார் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் சிறந்த சேவகருக்கான விருதினை மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் இணைந்து வழங்கினார்.
இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் உடன் இருந்தனர்