நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ
கொரட்டி பகுதியில் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணியை திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் தனது முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றி வருகிறது.
இந்நிலையில் வேளாண்மைக்கு இந்த நீரை பயன்படுத்தும் வழியில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சியில் உள்ள வாலேரியிலிருந்து வெளியேறும் உபரி நீரை இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள கொரட்டி ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரும் பணியை இன்று கொரட்டி பகுதியில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி பூஜை போட்டு பணியை துவக்கி வைத்தார்..
அப்பொழுது ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம் அன்பழகன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி, பொதுப்பணி துறை உதவிப் பொறியாளர் குமார், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..