திருப்பத்தூர்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளையும் மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வருவாய்த் துறையினர் நடவடிக்கை.;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வந்தது.
கொரோனா விதிமுறைகளை மீறியும் அதிக அளவில் பணம் வசூல் செய்வதாக மாவட்ட ஆட்சியர் சிவனருள் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்த மருத்துவ குழு மற்றும் வருவாய்த்துறையினர் மருத்துவமனைக்கு வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தலைமையிலான வருவாய்த்துறையினர் சீல் வைத்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் பகுதியில் இதுபோன்ற கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.