பைக்கிற்கு சரியாக பெட்ரோல் நிரப்ப சொல்லி பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அடி
திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனத்திற்கு சரியாக பெட்ரோல் நிரப்ப சொல்லி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய நபர்கள்;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த களத்தூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருபவர் விக்னேஷ்.
மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விக்கி (24) திருமலை (18), பவித்ரன் (18) ஆகிய மூன்று இளைஞர்கள் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப வந்து விக்னேஷிடம் பெட்ரோல் கேனை மேலே தூக்கி பிடித்து பெட்ரோல் போட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாய் தகராறில், மூவரும் பெட்ரோல் பங்க் ஊழியர் விக்னேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர், படுகாயமடைந்த விக்னேஷ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸார் மூன்று இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.