வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடனுக்கு தர்மஅடி

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தை கொள்ளையடித்த திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்த பொதுமக்கள்;

Update: 2021-12-25 12:30 GMT

கொள்ளையடிக்கப்பட்ட வீடு 

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாபட்டு அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சார்ந்த வெங்கடேசன் (40) இவர் கோயம்புத்தூரில் பானிபூரி கடை நடத்திவருகிறார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ரமேஷ் (42) மற்றும் இவருடைய நண்பர்கள் இரண்டுபேர் சேர்ந்து வெங்கடேசன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று உள்ளார்.

பின்னர் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீரங்கம் (62) என்பவர், மகன்கள் சென்னையில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருவதால், தனியாகத்தான் வசித்து வருகிறார். அப்போது வெங்கடேசன் வீட்டில் கொள்ளையர்கள் திருடி கொண்டு ஸ்ரீரங்கம் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி  திருடர்களை பிடிக்க முயன்றுள்ளனர் அப்பொழுது ரமேஷ் என்பவரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அவருடன் வந்த இரண்டு நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் கொள்ளையனை மீட்டு திருப்பத்தூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags:    

Similar News