திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து டேங்க் ஆப்ரேட்டர்கள் போராட்டம்

தோரணம்பதி ஊராட்சி திமுக ஊராட்சி மன்ற தலைவர் தங்களை பழிவாங்குவதாக கூறி டேங்க் ஆப்ரேட்டர்கள் தர்ணா போராட்டம்.

Update: 2022-01-21 16:20 GMT

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து டேங்க் ஆப்ரேட்டர்கள் தர்ணா போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதி ஊராட்சிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அப்போது திமுக கட்சியின் நிர்வாகியும், தோரணம்பதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான நித்தியானந்தன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டுள்ளார். பிறகு வெற்றி பெற்று தோரணம்பதி ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

இதனையடுத்து பதவியேற்ற 15 நாட்களில் தேர்தலில் தனக்கு வாக்களிக்கவில்லை என கூறி டேங்க் ஆப்ரேட்டரகளான தாதகுள்ளனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி, தோரணம்பதி பகுதியை சேர்ந்த மாணிக்கம், குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ், கோபலகிருஷ்ணன் ஆகிய நான்கு ஆப்ரேட்டர்களை பணியிடம் நீக்கம் செய்து உள்ளதாக உத்தரவு நகலை அவர்களது வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டேங்க் ஆப்ரேட்டர்கள் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இச்சம்பவம் குறித்து மனு அளித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக பணி வழங்காமல் வேறு நபர்களை கொண்டு பணி செய்து வருவதால் மனமுடைந்த நான்கு ஆப்ரேட்டர்களும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தனை கண்டித்தும் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News