மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மேகதாது அணை கட்டுவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு அனுமதிக்காது துரைமுருகன் திருப்பத்தூரில் பேட்டி;
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா நோய்த்தடுப்பு மாவட்டத்தில் எவ்வாறாக உள்ளன அதனை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, கதிர் ஆனந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்
அரசுத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் சுகாதாரத் துறை மருத்துவ துறை என அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகளை தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, மேகதாது அணை கட்டுவதற்கு பசுமை தீர்ப்பாயம் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு விரைவில் வரக்கூடிய உள்ளது. அதற்குள் கர்நாடக அரசு இடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்காது அதற்கான முழு முயற்சியை அரசு எடுக்கும் என கூறினார்.
அடுத்த ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அதை முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார் என கூறினார்.