திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிசன் செறிவூட்டல் கருவிகள்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் மதிப்பிலான ஆக்சிசன் செறிவூட்டல் கருவியை தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது.;

Update: 2021-07-16 16:21 GMT

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் ஆக்சிசன் செறிவூட்டல் கருவி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு பவுண்டேஷன் USA அறக்கட்டளை சார்பில் ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான 20 செறிவூட்டல்  கருவிகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வழங்கினார்.

இதனை மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரவேல் பெற்றுக்கொண்டார். அப்போது உடன் அரசு மருத்துவர் பிரபாகரன்,தலைமை செவிலியர் சரஸ்வதி, திமுக நகர செயலாளர் ராஜேந்திரன், அன்பழகன் உட்பட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News