திருப்பத்தூரில் விதிமீறல் 10 கடைகளுக்கு சீல் வைக்க எஸ் பி உத்தரவு
திருப்பத்தூரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 10 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் பஜார் பகுதியில் இன்று திடீரென எஸ்.பி. விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, புதிய பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றுகின்றனரா என்று காய்கறி கடைகளை பார்வையிட்டார். அதனை முடித்துக் கொண்டு ஜின்னா ரோடு வழியாக வாகன ரோந்தில் ஈடுபட்டார். அப்போது சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணியாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்த மளிகை கடை, காய்கறி கடை என 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது டி.எஸ்.பி பிரவீன் குமார் மற்றும் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் பேபி ஆகியோர் உடன் இருந்தனர்.