திருப்பத்தூர் அருகே தனியார் ஆலையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் பாேராட்டம்
திருப்பத்தூர் அருகே தனியார் நிறுவனத்தின் கழிவுநீர் வெளியேற்றம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.;
திருப்பத்தூர் அருகே தனியார் நிறுவனத்தின் கழிவுநீர் வெளியேற்றம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் செயல்படும் தனியார் சாக்லேட் நிறுவனத்தின் கழிவுநீரை ஆற்றில் கலந்துவிட்டு விவசாய நிலங்களை அழிப்பதாக கூறி ராசமங்கலம், அனேரி, புலிக்குட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருப்பத்தூர் டூ திருவண்ணாமலை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.