இட ஒதுக்கீடு ரத்து: பாமகவினர்   சாலைமறியல் போராட்டம்

திருப்பத்தூரில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்து பாமகவினர் திடீரென  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-11-01 12:15 GMT

இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்  

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நவம்பர் மாதம் 1ஆம் தேதி இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழக அரசின் வாதங்கள் சரியாக முன்வைக்கவில்லை என கூறி 10.5 இட ஒதுக்கீட்டை  நீதிமன்றம்  ரத்து செய்தது.

இதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலை பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர்.  இதில் முன்னாள் எம்எல்ஏ ராஜா, மாநில துணை தலைவர் பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் கிருபாகரன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்ப வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

அதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்

Tags:    

Similar News