சேதமான தரைப்பாலத்தில் ஆபத்தான நிலையில் சென்று வரும் பொதுமக்கள்

திருப்பத்தூர் அருகே தரைப்பாலம் சேதமானதால் பொதுமக்கள், மாணவர்கள் தண்ணீரில் ஆபத்தான நிலையில் சென்று வருகின்றனர்;

Update: 2021-11-17 15:52 GMT

வெள்ளநீரில் கயிற்றைப்பிடித்து பிடித்தபடி அக்கரைக்கு செல்லும் மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழையால் ஆங்காங்கே ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி நீரோடைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரட்டி வழியாக ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு செல்லும் கிளை ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

கொரட்டி - தண்டுகானூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் பொதுமக்கள் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த ஊராட்சி நிர்வாகம் உடனடியாக கயிறு கட்டி பொது மக்கள் பாதுகாப்பாக செல்ல வழி வகை செய்தனர். தற்போது  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கயிறை பிடித்து கரையை கடந்து வருகின்றனர். 

அப்பகுதியில் மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags:    

Similar News