செட்டேரி அணைக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாட்றம்பள்ளி அருகே செட்டேரி அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்படுத்தி தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட வெலக்கல்நத்தம் ஊராட்சி செட்டேரிஅணைபகுதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையில் இருந்து தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தரக்கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இடம் மனு அளித்தனர்.