திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்: எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு
திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக்குழு முதல் நாள் கூட்டத்தில் எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு;
திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழுத்தலைவர் விஜயா அருணாசலம் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒன்றியக் குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய எம்எல்ஏ நல்லதம்பி கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று ஒன்றிய கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் ஒன்றாக இணைந்து மக்கள் நலனுக்காக பணிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்
பணியில் இருந்த பொழுது உயிரிழந்த 2 குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளுக்கு , குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அடிப்படையில் கருணை பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில் துணை தலைவர் ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார்,சந்திரன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.