திருப்பத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் எம்எல்ஏ ஆய்வு

திருப்பத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் எம்எல்ஏ நல்லதம்பி திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2021-07-23 16:58 GMT

திருப்பத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் எம்எல்ஏ நல்லதம்பி ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்வதாக பகுதி மக்கள் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பியிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இன்று திடீரென குனிச்சி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு நேரடியாக திடீரென ஆய்வு செய்தார்.

அப்பொழுது கிடங்கில் அரிசி தரமற்ற அரிசி வருகின்றனவா? என்பதையும் எங்கிருந்து அரிசி வருகின்றன நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறதா மேலும் அரிசி மற்றும் பருப்பு எண்ணெய் ஆகியவற்றை மக்களுக்கு சென்றடைய போதிய அளவு இருப்பு உள்ளதா என்பதையும் அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து அரிசி குடோன் சுற்றுச் சுவர் அமைத்து தர கோரிக்கை வைத்தனர். அதை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் அதை கட்டித்தருவதாக சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் பராமரிப்பு செய்யாமல் செயல்படவில்லை என்பதை  கண்டறிந்தார். உடனடியாக அதனை சீர் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..

Tags:    

Similar News