உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு வாகனத்தை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூரில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு வாகனத்தை எம்எல்ஏ தேவராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்;
திருப்பத்தூர் மாவட்டம் அரசினர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க.தேவராஜ் கலந்து கொண்டு தாய்பால் வார விழா விழிப்புணர்வு வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, திருப்பத்தூர் சப் கலெக்டர் அலர்மேல்மங்கை, திட்ட இயக்குனர் செல்வராஜ், உட்பட அங்கன்வாடி பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.