கொரோனா நோய்தொற்று குறித்து அமைச்சர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

Update: 2021-05-18 16:40 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் காந்தி ஆய்வு நடத்தினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் ஆம்பூரில் கொரோனா சிகிச்சை குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்

பின்னர் ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், 100 படுக்கைகள் கொண்ட கொரோனா மானிட்டரிங் சிகிச்சை மையம் 4 நாட்களில் அமைக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்பு அதற்கான அரசு மருத்துவமனையில் உள்ள இடங்களை தேர்வு செய்து விரைவில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

4 அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இடங்களை தேர்வு செய்த அமைச்சர், ஆம்பூர் வர்த்தக மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட மானிட்டரிங் மையமும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட மானிட்டரிங் மையமும், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி நாட்றம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 படுக்கைகள் கொண்ட மானிட்டரிங் மையமும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட மானிட்டரிங் மையம் ஆகியவை உடனடியாக அமைக்கப்படும் என தெரிவித்தார்.

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்

Tags:    

Similar News