திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு தற்காலிக சிகிச்சை மையத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமையவுள்ள கொரோனா சிறப்பு தற்காலிக சிகிச்சை மையத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2021-06-01 16:24 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமையவுள்ள கொரோனா சிறப்பு தற்காலிக சிகிச்சை மையத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் தீவிரமடைந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 350 படுக்கை வசதிகள் கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டியுடன் கூடிய  உள்ள கொரோனா சிறப்பு தற்காலிக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனுடைய கட்டமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இதனை விரைவில்  அமைச்சர் மா. சுப்ரமணியம் திறந்துவைக்க உள்ளதால், அவற்றை இன்று அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்

இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News