கள்ளச்சாராய வியாபாரிகளை  கைது செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

கள்ளச்சாராய வியாபாரிகளை  கைது செய்ய வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Update: 2022-03-08 03:18 GMT

கள்ள சாராய வியாபாரிகளை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் மகேஸ்வரி மற்றும் சீனிவாசன் அவரது மகன் சின்னராஜ்,  தேவேந்திரன்,  சீனிவாசன் உட்பட சிலர் அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் துணையுடன்  தொடர் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறி ஆலங்காயம் சாலையில் அமர்ந்து  சுமார் 4 மணி நேரம் தொடர் சாலை மறியல்  போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி காவல்துறையினர் துணையோடு சாராய கும்பல் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்

அப்பொழுது அதிகாரிகள் உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.. அதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மனுவாக கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

Tags:    

Similar News