திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று வியாழக்கிழமை மதியமும், நாளை வெள்ளிக்கிழமையும் அனைத்து பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்தார்.
ஏற்கனவே காலை 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது மாவட்ட ஆட்சியர் மதியம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை என அறிவித்திருக்கிறார்
அதேபோன்று நாளை வெள்ளிக்கிழமை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்திருக்கிறார்