திருப்பத்தூரில் கோவிலில் புகுந்த பாம்பு
திருப்பத்தூர் டவுன் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கோவிலில் புகுந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்;
கோவிலுக்குள் புகுந்த பாம்பை பிடித்த வனத்துறையினர்
திருப்பத்தூர் டவுன் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் விநாயகர் கோயில் மற்றும் அம்மன் கோவில்கள் உள்ளது. இங்கு சாமி கும்பிட பக்தர்கள் அதிக அளவில் வந்தபோது கோவில் அருகே திடீரென பாம்பு வந்தது.
அதனை பார்த்த பக்தர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அதற்குள் அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் கொம்பேறி மூக்கன் வகை பாம்பு என்பதால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் வனத்துறையினர் பாம்பை பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டனர்.