திருப்பத்தூர் அருகே விஷம் வைத்து 12 மயில்கள் உயிரிழப்பு: விவசாயி கைது

திருப்பத்தூர் அருகே மயில்களுக்கு விஷம் வைத்து 12 மயில்கள் உயிரிழந்ததற்கு காரணமான விவசாயி கைது செய்யப்பட்டார்;

Update: 2022-03-12 11:15 GMT

திருப்பத்தூர் அருகே விஷம் வைத்து கொல்லப்பட்ட மயில்கள்

திருப்பத்தூர் அருகே விஷம் வைத்து 12மயில்களைக் கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் , மிட்டூர்  அடுத்த குரும்பட்டி பகுதியில் சாவித்திரி என்பவருடைய நிலத்தை குத்தகை எடுத்து சண்முகம் ( 71)  என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.இந்த நிலையில் சுமார் 2 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை வளர்த்து வந்துள்ளார்.நெற் பயிர்களை எலிகள் மற்றும் பறவைகள் சேதப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் விவசாயி எலிகளை கொல்வதற்காக நெல்லில் விஷத்தை கலந்து வைத்துள்ளார். அப்போது இரை தேடி வந்த 12 மயில்கள் அதனை சாப்பிட்ட போது ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்தன..

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர். மயிலுக்கு விஷம் வைத்துக் கொன்ற  விவசாயி சண்முகம் என்பவரை கைது செய்தனர். மேலும் 12 மயில்களின் உடல்களை  பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

தொடர்ந்து ஆலங்காயம் சுற்றியுள்ள பகுதிகளில் விஷம் வைத்து மயில்களை கொன்று வருகின்றனர். வனத்துறையின் அலட்சியத்தாலும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக  சமூக ஆர்வலர்கள்  குற்றம்சாட்டி உள்ளனர்.  ஏற்கெனவே அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News