கலெக்டர் தலைமையில் 13 மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்பு
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 13 மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 6 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன
அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது இதில் 13 இடங்களிலும் திமுக கட்சி சார்ந்தவர்கள் கைப்பற்றினர் இந்நிலையில் இவர்களுக்கான பதவியேற்பு நிகழ்வு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்கள் முறைப்படி பதவிப்பிரமாணம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்