திருப்பத்தூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ ஆய்வு
திருப்பத்தூரில் 8 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன.
இதனை மாவட்ட ஆட்சியர் சிவனருள், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் பார்வையிட்டனர். இதில் மின்வாரிய ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பொதுக்மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டன. இப்பணியின் போது இணை இயக்குனர் குடும்ப நல மருத்துவர் மணிமேகலை, துணை இயக்குனர் சுகாதார மருத்துவர் செந்தில், மின்வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தர்யா, செல்வி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்