திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக திமுகவின் சூரியகுமார் தேர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2021-10-22 14:00 GMT

 சூரியகுமார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட கவுன்சிலர், மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர் கடந்த 20 ஆம் தேதி பதவியை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் இன்று,  மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர் மற்றும் துணை தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் போன்ற பதவிகளுக்கு, மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தேர்தல்,  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகத்தில்,  மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

திமுக சார்பில்  முன்னாள் எம் எல் ஏ சூரியகுமார், கவிதா தண்டபாணி என இருவர்  போட்டியிட்டனர் இதில் முன்னாள் எம்.எல்.ஏ சூரியகுமார் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 6 வாக்குகள் பெற்று கவிதா தண்டபாணி என்பவர் தோல்வியுற்றார். வெற்றி பெற்ற சூரியகுமாருக்கு, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News