திருப்பத்தூரில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா: எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் ப.முத்தம்பட்டி, அண்டிவட்டம் ஊராட்சி திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ப.முத்தம்பட்டி ஊராட்சியில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பட்டு நிதியில் இருந்து ப.முத்தம்பட்டி துடுக்கன் வட்டம் பகுதியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் அண்டி வட்டம் பகுதியில் 4 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஊர்பொதுமக்கள் முன்னிலை நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு சிமெண்ட் சாலை மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்வில் கந்திலி ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தசரதன், மற்றும் நிர்வாகிகள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.